கூடலூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்
கூடலூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்
கூடலூர்
கூடலூர் துப்புக்குட்டிபேட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை அறிந்த மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள் யோகராஜ், கணையேந்திரன், மோகன்குமார் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து துப்புகுட்டிபேட்டை பகுதியில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் கிடந்த பழைய பொருள்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் லார்வா புழுக்கள் உள்ளதா என பரிசோதித்தனர். மேலும் தூய்மை பணியாளர்கள் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகள், தெருக்களில் கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதார பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.