டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி
களக்காட்டில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் களக்காட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லூரி தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கிங்ஸ்லி மோசஸ் முன்னிலை வகித்தார். பேரணியை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரி மஞ்சுளா, திருக்குறுங்குடி வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி, வட்டார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் கண்ணன், கல்லூரி முதல்வர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story