சோளிங்கரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்
சோளிங்கரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை
சோளிங்கர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிதாஸ் தலைமையில், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் சவுந்தரபாண்டியன், குமார், கிரண், பிரகாஷ் மற்றும் மருத்துவ குழுவினர் பாணாவரம் கூட்ரோடு, பாண்டியநல்லூர் பகுதிகளில் சிறு தொழிற்சாலைகள், பழைய பொருட்கள் கிடங்கு, பழைய டயர் கிடங்கு, இளநீர் விற்பனை கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்ரு செய்தனர். அப்போது டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதமாக சுகாதார சீர்கேடு இருந்த இடங்களை கண்டறிந்து தூய்மையாக வைத்திருக்கவும், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இப்பகுதிகளில் சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்தால் உரிய நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story