டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு


டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு
x

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு

திருப்பூர்

வெள்ளகோவில்

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணி புரியும் அனைத்து பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன் வேல்முருகன் ஆகியோர் விளக்கி கூறினர். ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை குறித்து வட்டார சுகாதாரப்புள்ளியல் ஆய்வாளர் பெரியசாமி எடுத்து கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.



Next Story