பல் மருத்துவ முகாம்


பல் மருத்துவ முகாம்
x

சீர்காழியில் பல் மருத்துவ முகாம் நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு பல் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.விவேகானந்தா பள்ளி துணை முதல்வர் சரோஜா வரவேற்றார். முகாமை சீர்காழி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பானுமதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் பொன்விழாவை ஒட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பள்ளியில் படித்து தற்பொழுது பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் பல் டாக்டர்களாக பணியாற்றி வரும் டாக்டர்கள் 11 பேர் ஒன்றிணைந்து தான் படித்த விவேகானந்தா பள்ளியில் சிறப்பு பல் பரிசோதனை முகாம் நடத்த பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டனர். அதன்படி பல் டாக்டர்கள் கல்விக் குழுமங்களில் பயிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பல் பரிசோதனை செய்தனர். இந்த முகாம் நேற்று காலை தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை சார்பு கல்வி நிறுவனங்கள் வாரியாக நடைபெறுகிறது. முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பல் டாக்டர்கள், செய்திருந்தனர். முடிவில் கல்விக் குழுமங்களின் நிர்வாக அலுவலர் சண்முகம் நன்றி கூறினா


Next Story