கைதிகளுக்கு பல் சிகிச்சை முகாம்
வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் அமைந்துள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகளுக்கான சிறப்பு பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் ஏராளமான கைதிகள் கலந்து கொண்டு பல் தொடர்பாக பரிசோதனை செய்து கொண்டனர். அதில் பற்களை சுத்தம் செய்தல், ஆடும் பற்களை பிடுங்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் சிறை மருத்துவர் பிரகாஷ் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story