அரவைக்காக 25 ஆயிரம் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு


அரவைக்காக 25 ஆயிரம் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு
x

அரவைக்காக 25 ஆயிரம் நெல் மூட்டைகள் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன

மயிலாடுதுறை

சீர்காழி

மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் நெல் மூட்டைகள் நேற்று லாரிகள் மூலம் சீர்காழி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் அந்த நெல் மூட்டைகளை சரக்கு ரயிலில் ஏற்றினர். பின்னர் திருப்பூரில் உள்ள அரிசி ஆலைக்கு நெல்மூட்டைகளுடன் அந்த சரக்கு ரெயில் அனுப்பி வைக்கப்பட்டது.





Next Story