தொழிலாளியிடம் வழிப்பறி; 2 பேர் கைது


தொழிலாளியிடம் வழிப்பறி; 2 பேர் கைது
x

தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சூரமங்கலம் தர்மநகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 62), கூலித்தொழிலாளி. இவர் பழைய சூரமங்கலத்தில் உள்ள ெரயில்வே கூட்செட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1,500 பணம் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர், இந்த சம்பவம் குறித்து கணேஷ் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கணேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தது சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த சிவா (20) மற்றும் அவரது நண்பரான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கேசவன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story