சுகாதார துணை இயக்குனர் ஆய்வு


சுகாதார துணை இயக்குனர் ஆய்வு
x

வாணியம்பாடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் சுகாதார துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-நியூடவுன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர் டி.ஆர்.செந்தில் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது புறநோயாளிகள் பதிவு, பிரசவித்த தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றதா என்பதனையும், தடுப்பூசி இருப்பு மற்றும் மக்களை தேடி மருத்துவத் திட்டம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு இருந்த புறநோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி, டாக்டர் ஜெஸ்ரீ மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story