சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு குறித்து துணை இயக்குனர் ஆய்வு


சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு குறித்து துணை இயக்குனர் ஆய்வு
x

ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு குறித்து மாவட்ட துைண இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குனர் பிரீத்தா கலந்து கொண்டு, ஆலங்காயம் வட்டாரத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தொழுநோய் குறித்த புத்தாக்க பயிற்சி அளித்தார். அதுபோல நலக்கல்வியாளர் பிச்சாண்டி தொழுநோய் குறித்து நலக்கல்வி அளித்தார்.


Next Story