இலங்கை துணை உயர் ஆணையர் கோவிலில் சாமி தரிசனம்
தா.பழூர் அருகே இலங்கை துணை உயர் ஆணையர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அரியலூர்
தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஆணையராக இருப்பவர் கலாநிதி துரைசாமி வெங்கடேஸ்வரன். இவர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்தநிலையில் நேற்று தனது சொந்த பயணமாக அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலான அங்காள பரமேஸ்வரி கோவிலில் தனது மனைவியுடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. கோவிலில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இருந்து வழிபாடுகளை மேற்கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story