முஸ்லிம் மக்களுக்கு துணை சபாநாயகர் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு துணை சபாநாயகர் வாழ்த்து ெதரிவித்தார்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஈக்தா மைதானத்தில் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேரில் வந்து வாழ்த்தினார்.
அப்போது தி.மு.க. மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், தொழிலதிபர் ஜமாலுதீன், நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், இல.குணசேகரன், ஷெரீப் உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோடு, அவலூர்பேட்டை ரோடு, பாவாஜி நகர் மற்றும் காட்டாம்பூண்டி, நல்லவன்பாளையம், அல்லிகொண்டாப்பட்டு, ராதாபுரம், தென்கரும்பலூர், நரியாப்பட்டு ஆகிய பகுதிகளில் தொழுகை முடித்து திரும்பியவர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.