தோல்நோய் சிகிச்சை முகாம்


தோல்நோய் சிகிச்சை முகாம்
x

தூத்துக்குடியில் தோல்நோய் சிகிச்சை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மருத்துவ பணிகள் தொழுநோய் பிரிவு சார்பில் தூத்துக்குடி அருகே உள்ள ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலயத்தில் இலவச தோல்நோய் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமை புனித பிலோமினம்மாள் ஆலய நிர்வாகி விமல் தொடங்கி வைத்தார். மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) யமுனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

முகாமில் நலக்கல்வியாளர் முத்துக்குமார், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நியூட்டன், சுகாதார ஆய்வாளர்கள் மந்திர மூர்த்தி, கமலேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் வில்சன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story