கொல்லன் குளத்தில் தேங்கியுள்ள அசுத்தநீர்


கொல்லன் குளத்தில் தேங்கியுள்ள அசுத்தநீர்
x

கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூர் கொல்லன் குளத்தில் அசுத்தநீர் தேங்கி உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூர் கொல்லன் குளத்தில் அசுத்தநீர் தேங்கி உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொல்லன் குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, ஓகைப்பேரையூரில் கொல்லன் குளம் உள்ளது. இந்த குளத்தை ஓகைப்பேரையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் குளிப்பதற்கும், ஆடைகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் குளம் மாசு படர்ந்த குளமாக மாறியது.இந்த நிலையில், வாய்க்கால் ஆக்கிரமிப்பில் சிக்கியதால், கடந்த 20 ஆண்டுகளாக, ஆற்றில் இருந்து குளத்திற்கு தண்ணீர் வர முடியவில்லை. தேவையற்ற தண்ணீர் வெளியேறவும் முடியாமல் போனது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் மட்டுமே குளத்தில் தேங்கி நிற்கிறது.

தூர்வார கோரிக்கை

குளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் மாசடைந்து பச்சை நிறத்தில் மாறி அசுத்தமான தண்ணீராகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரசீர் கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குளத்தை சுற்றியுள்ள பகுதியில் வீடுகள் இருப்பதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.மேலும், குளத்தில் உள்ள படித்துறைகளும் சேதமடைந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே, நடப்பாண்டில் குளத்துக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கான வாய்க்காலை சீரமைத்து குளத்தை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story