வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை
x

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள புலிமலைப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் விஜய் (வயது 27). ஏழை குடும்பத்தை சேர்ந்த விஜய் சிவில் என்ஜினீயர் பட்டதாரியாவார். வெளிநாட்டு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவோடு 4 முறை முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. இதனிடையே ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி வெளிநாட்டு வேலைக்கு செல்ல தனியார் ஏஜெண்ட் ஒருவர் மூலம் முயற்சி செய்து உள்ளார்.

அப்போது விஜய்க்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டு வெளிநாட்டு வேலை செல்வதற்கான உடல் பரிசோதனை தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு வேலைக்கு செல்லமுடியாமல் போய்விட்டதே என விஜய் விரக்தியுடன் காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story