ஆதரவற்ற தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ஆதரவற்ற தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
ஆதரவற்ற தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் உள்ள கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 31). இவர் சிவில் சப்ளை குடோனில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தாய்- தந்தை இருவரும் இறந்ததால் ஆதரவு இல்லாத நிலையில் திருமணமும் ஆகாததால் மதுவுக்கு அடிமையானார். கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு இருந்ததை இவரது அக்காள் செல்வி கண்டித்துள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நவீன்குமார் ஆரணி- வந்தவாசி ரோட்டில் உள்ள பாகவதர் திருமண மண்டபத்தின் அருகாமையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் நவீன் குமாரின் அக்காள் செல்வி புகார் அளித்தார். அதன்ேபரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.