ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற சேவை மையங்களை அணுகலாம்


ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற சேவை மையங்களை அணுகலாம்
x

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற சேவை மையங்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டங்களில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் வழங்கிட கோரி நேரடியாக பொதுமக்களால் அளிக்கப்படும் மனுக்களை விசாரணை செய்து வருவாய் கோட்டாட்சியர்களால் மேற்படி சான்று வழங்கப்பட்டு வருகிறது. தற்போது செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஆதரவற்ற சான்றுகள் இணையவழி மூலம் வழங்கப்பட்டு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி இணையவழி மூலம் மட்டுமே ஆதரவற்ற சான்றுகள் வழங்கப்பட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இனிவரும் காலங்களில் ஆதரவற்ற விதவை சான்று வழங்கிட பொது சேவை மையம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் இணையவழி விண்ணப்பித்து ஆதரவற்ற சான்று பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story