3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சி உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களுக்கு கடத்தி்ச்சென்று விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பகவலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பெயரில் 5 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50 போலீசார் கொண்ட 5 தனிப்படையினர் கல்வராயன்மலையில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் நடத்திய வேட்டையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக கல்வராயன்மலை அடிவாரப்பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
இது தவிர கரியாலூர் போலீசாரும் கல்வராயன்மலையில் உள்ள குரும்பலூர் வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், ஒரு குடிநீர் தொட்டியில் 500 லிட்டர் சாராயம் ஆகியவற்றை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர்.