3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திம்மாம்பேட்டை அருகே 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், திம்மாம்பேட்டை போலீசார் இணைந்து, தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தினர்.அப்போது கொரிப்பள்ளத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சாராயம் காய்ச்ச தயார் நிலையில் வைத்திருந்த சுமார் 1,500 லிட்டர் ஊறலை கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. மேலும் அதே ஊரைச் சேர்ந்த கேசவன் சாராயம் காய்ச்ச வைத்திருந்த சுமார் 1,500 லிட்டர் சாராய ஊரலும் அழிக்கப்பட்டது.
தலைமறைவாக உள்ள இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story