4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
சிங்காரப்பேட்டை அருகே 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது எட்டிப்பட்டி கிராமம். இங்குள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் காட்டுப்பகுதியில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலஅட்மின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் பிரபாகரன், அதியமான், நாசில் ஆகியோர் எட்டிப்பட்டி காமராஜ் நகர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது. சாராய ஊறல் வைத்திருந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story