ஓட்டலில் 500 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிப்பு


ஓட்டலில் 500 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிப்பு
x

நாகர்கோவிலில் ஒரு ஓட்டலில் 500 கிலோ கெட்டுப்போன மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அந்த ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவிலில் ஒரு ஓட்டலில் 500 கிலோ கெட்டுப்போன மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அந்த ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

நாகர்கோவில் மாநகரில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது மற்றும் திறந்த வெளியில் உணவுகளை வினியோகிக்கும் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் டதி பள்ளி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுப்போன மீன்களை சமைத்து உணவு பரிமாறப்படுவதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

இதனைதொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை மாநகர் நல அதிகாரி ராம்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஜாண், ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

சோதனையில் கெட்டுப்போன மீன்கள் ஓட்டலில் இருந்தது தெரியவந்தது. அங்கு மீன்களை பதப்படுத்த எந்த ஒரு வசதியும் இல்லாததும், மீன்கள் மீது ஐஸ்கட்டிகள் மட்டும் போடப்பட்டு வைத்திருந்ததையும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து மொத்தம் 500 கிலோ மீன்களை அழித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவருடைய உத்தரவின் பேரில் ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story