800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 2 பேர் கைது


800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி கிராமத்தில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் உள்ள எக்கா மலையில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கடைத்தது. இதையடுத்து அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் வீரபாண்டி கிராமத்துக்கு விரைந்து சென்று சாராயவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 பேரல்களில் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வீரபாண்டி கிராமம் பள்ளத்தெருவை சேர்ந்த பாலு(வயது 45) என்பவரை கைது செய்தனர்.

அதேபோல் ஒட்டம்பட்டு கிராமத்தில் 200 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன்(33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story