புதுப்பேட்டை அருகே சாலை விரிவாக்க பணி:கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேளாண் பயிர்கள் அழிப்புவிவசாயிகள் வேதனை


புதுப்பேட்டை அருகே சாலை விரிவாக்க பணி:கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேளாண் பயிர்கள் அழிப்புவிவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேளாண் பயிர்களை அதிகாரிகள் அழித்தனர். இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

கடலூர்


புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், அதில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, கொய்யா, நெல் போன்ற பயிர்கள் அறுவடை செய்வதற்காக காலக்கெடு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கால அவகாசம் கொடுத்து இருந்தும், முன்னறிவிப்பின்றி நேற்று திடீரென நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருவாய் துறை மற்றும் புதுப்பேட்டை காவல்துறை உதவியுடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவரது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்பு மற்றும் விவசாய நிலங்களில் இருந்த கொய்யா, நெல் போன்ற பயிர்களை அழித்து சேதப்படுத்தினர்.

தடுத்த நிறுத்த முயன்ற விவசாயிகள்

இதை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் அதிகாரிகள் பின்வாகங்க வில்லை. அய்யனார் உள்ளிட்ட சிலர் கண்ணீர்விட்டு அழுதபடி கேட்டும் அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்தனர்.

ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story