புதுக்கோட்டையில் பெய்த மழை அளவு விவரம்


புதுக்கோட்டையில் பெய்த மழை அளவு விவரம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. சாலையில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- பெருங்களூர்-7, புதுக்கோட்டை-67, ஆலங்குடி-28, கந்தர்வகோட்டை-2, கறம்பக்குடி-12.80, மழையூர்-6.40, கீழணை-48, திருமயம்-40.60, அரிமளம்-65.20, அறந்தாங்கி-74.40, ஆயிங்குடி-63.20, நாகுடி-76.40, ஆவுடையார்கோவில்-34, மணமேல்குடி-2, இலுப்பூர்-2, குடுமியான்மலை-66, அன்னவாசல்-16, விராலிமலை-4.50, பொன்னமராவதி-6.20, காரையூர்-28.


Next Story