5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் விவரம்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி 5-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் மறுநாள் (6-ந்தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.
புதுச்சேரியில் இருந்து 5-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.
6-ந்தேதி மயிலாடுதுறையில் இருந்து ரெயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது. அதேபோல் 6-ந்தேதி கடலூர் மாவட்டம் திருபாதிரிப்புலியூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது.
சென்னை கடற்கரை
அதேபோல் 6-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது. புதுச்சேரியில் இருந்து 6-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.
மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 7-ந் தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது.
7-ந்தேதி மயிலாடுதுறையில் இருந்து ரெயில் புறப்பட்டு காலை 6 மணிக்கு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது. 7-ந்தேதி திருபாதிரிப்புலியூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது.
திருபாதிரிப்புலியூர்
அதேபோல் 7-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 8-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.
புதுச்சேரியில் இருந்து 7-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது. க்ஷ
மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 8-ந்தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது.
இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.