மின்சாரம் பாய்ந்து தேவாங்கு பலி


மின்சாரம் பாய்ந்து தேவாங்கு பலி
x

வயரில் மரக்கிளை உரசியதால், மின்சாரம் பாய்ந்து தேவாங்கு பரிதாபமாக இறந்தது.

திண்டுக்கல்

அய்யலூர் களர்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில், மின்சார வயரில் தேவாங்கு ஒன்று இறந்த நிலையில் நேற்று தொங்கி கொண்டிருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேவாங்கின் உடலை மீட்டனர். பின்னர் வடமதுரை அரசு கால்நடை மருத்துவர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் தேவாங்கின் உடலை பரிசோதனை செய்தார். அதில், இறந்தது சுமார் 1½ வயதுடைய பெண் தேவாங்கு என்று தெரியவந்தது.

இரைதேடி அந்தப்பகுதியில் இருந்த வில்வ மரத்தில் தேவாங்கு எறியுள்ளது. அப்போது மரத்தின் கிளைகள், மின்சார வயர் மீது உரசி கொண்டிருந்ததால், அதன் மீது மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்தது. இதற்கிடையே உடல் பரிசோதனைக்கு பிறகு, தேவாங்கின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. அரிய வகை உயிரினமான தேவாங்கை பாதுகாக்கும் வகையில், அய்யலூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story