ரூ.49 லட்சத்தில் மேம்பாட்டுப்பணி


ரூ.49 லட்சத்தில் மேம்பாட்டுப்பணி
x

மயிலாடுதுறை நகர பூங்காவில் ரூ.49 லட்சத்தில் மேம்பாட்டுப்பணியை ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வரதாச்சாரியார் நகர பூங்காவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நடைபயிற்சியாளர்களுக்கு தேவையான நடைமேடை, இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக்கூடம், அனைத்து வயதினருக்கான யோகா மையம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் இந்த பூங்கா மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசபை துணைத் தலைவர் சிவக்குமார், நகராட்சி உறுப்பினர்கள் சம்பத், ஜெயந்தி, சர்வோதயன், ரமேஷ், உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வரவேற்றுப் பேசினார். ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வடவீரபாண்டியன், நவாஸ், ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story