வளர்ச்சி திட்ட பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு
நாகையில் வளர்ச்சி திட்ட பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்
நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். மகளிர் கல்லூரி சாலையில் சிறிய பாலத்துடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டனர். அப்போது பணிகளை தரமாக விரைந்து முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் கலா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story