உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம்


உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம்
x

தா.பழூரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கத்தில் தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கான கிராம வளர்ச்சி பணிகள் குறித்த மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அன்பு செல்வன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பயிற்சியில் கிராம ஊராட்சிகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கீதா, சந்தியா ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர். கிராம ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்துவது, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story