வளர்ச்சி திட்ட பணிகள்
அருப்புக்கோட்டை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை,ஜூலை.17-
அருப்புக்கோட்டை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
குடிநீர்தொட்டி
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சூலக்கரை, பெரிய வள்ளிகுளம், கோபாலபுரம், ராமானுஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அதன்படி சூலக்கரை ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மினி குடிநீர் தொட்டியையும், பெரிய வள்ளி குளம் ஊராட்சியில் ரூ. 4½ லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டியையும், கோபாலபுரம் ஊராட்சியில் கூடங்குளம் அணுமின் நிலையம் திட்டத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகள் எளிதாக பாடங்களை கற்றுக்கொள்ளும் வகையில் பல வர்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் தொடங்கி வைத்தார்.
ரேஷன்கடை
அதேபோல ராமானுஜபுரம் ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையையும் தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா, தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு ராமானுஜம், ஆர்.டி.ஓ. கணேசன், தாசில்தார் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜா மைதீன் பந்தேநவாஸ், சூர்யகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் திரவியம், நளினி, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.