வளர்ச்சி திட்ட பணிகள்


வளர்ச்சி திட்ட பணிகள்
x

திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட மரைக்கான் சாவடி மற்றும் பூதங்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதைதொடர்ந்து கட்டுமாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் அங்கன்வாடி கட்டிடம், கணபதிபுரம், அம்பல், திருக்கண்ணபுரம் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணியை பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர் அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட இருக்கைகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருமருகல் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், திட்டச்சேரி பேரூராட்சி மன்றதலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், தி.மு..க நகர செயலாளர் முகமது சுல்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.பின்னர் திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, அகரக்கொந்தகை ஊராட்சி பகுதிகளில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.முன்னதாக முகாம் அமைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.


Related Tags :
Next Story