வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு
x

விக்கிரவாண்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக விக்கிரவாண்டி பேரூராட்சியில் குளத்தை மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்ட அவர் வீடூர் அணை ஆத்திக்குப்பம் பகுதியில் இருந்து விக்கிரவாண்டி டவுன்வரை குடிநீர் குழாய் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார கழிவறைகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி, கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடேசன், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலை உதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story