மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சி ஆகியவற்றை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சி ஆகியவற்றை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது தொடங்கி நடபெற்றது.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, எம்.எல்.ஏ.க்கள் விஜி ராஜேந்திரன், எழிலன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் வளர்ச்சித் திட்டங்கள், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படடது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஊரக வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். நியாய விலைக்கடைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தரமான மருத்துவ சேவையை எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சமமான வளர்ச்சியே சமூக நீதியும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கும்.
பொருளாதார குறியீட்டை வைத்து மட்டும் வ ளர்ச்சி தீர்மானிக்கப்படாது. மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சி ஆகியவற்றை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும்
1-2 வயதான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை என்று இருந்தது. தற்போது 3 முட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.