திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
திருவாரூர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை(சனிக்கிழமை) நாகப்பட்டினத்தில் 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நடந்து வரும் புதிய காய்கறி மார்க்கெட் கட்டும் பணி, காலை சிற்றுண்டி திட்ட சமையலறை மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் நடக்கும் ராம மடகுளம் மேம்பாட்டு பணி ஆகியவற்றை நேற்று நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், ஆணையர் பிரதான் பாபு, நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ். பாண்டியன், பொது சுகாதார மேற்பார்வையாளர் ரஜேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story