தேவேந்திர குலவேளாளர் சங்க ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி வட்டார தேவேந்திர குலவேளாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் திட்டங்குளத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் சங்க தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் பெரியதுரை, காளீஸ்வரன், பாலமுருகன், சண்முகராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரனார் சங்க செயலாளர் சுதந்திர ராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் பார்வதி சண்முகசாமி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் மறைவிற்கு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. வீரன் சுந்தரலிங்க தேவேந்திரனார் சிலையை நிறுவிய பசுபதி பாண்டியன் வாரிசுதாரர்களுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டும். கோவில்பட்டியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்க தேவேந்திரனார் வெண்கல சிலையை தனிநபர் யாரும் உரிமை கொண்டாடக்கூடாது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ், பா.ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் அய்யாதுரை பாண்டியன், காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாநில பொறுப்பாளர் சின்னப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், கனகராஜ், மூவேந்தர் மருதம் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்னுச்சாமி, மள்ளர் பேரமைப்பு ராஜா, இந்திரகுல ஐக்கிய சங்க தலைவர் கருத்த பாண்டியன், வக்கீல் செல்லத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.