பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்திக்கடன் பங்குனி உத்திர விழாவில் பரவசம்

பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்திக்கடன் பங்குனி உத்திர விழாவில் பரவசம்
x

பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். சிறுவன், அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். சிறுவன், அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

பங்குனி உத்திரவிழா

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வாணாபுரம் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும் கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்தும் உடலில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மேலும் உடலில் அலகு குத்தி கனரக வாகனங்களை இழுத்துச் சென்றனர். வேலையாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 3 பக்தர்கள் டிராக்டரை பரவசத்துடன் இழுத்துச் சென்றனர்.

மேலும் சிலர் பறவை காவடி எடுத்தும் செக்கிழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஒரு பக்தர் 108 அலகு குத்தி மயில் காவடி எடுத்து வந்தார்.

இதேபோல் வரகூரில் பக்தர் ஒருவர் குழந்தையை சுமந்தவாறு செடல் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தியதும், சிறுவன் அலகு குத்தி அந்தரத்தில் பறந்தவாறு வந்ததும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

தீமிதித்தனர்

வாழவச்சனூர், பெருந்துறைப்பட்டு, தலையாம்பள்ளம், சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, தச்சம்பட்டு, பேரயாம்பட்டு, அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், மெய்யூர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும் தேர் இழுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

Next Story