குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டுவண்டியில் வந்த பக்தர்கள்
குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டுவண்டியில் பக்தர்கள் வந்தனர்.
விருதுநகர்
ஆலங்குளம்,
கீழராஜகுலராமன் கிராமத்தில் பொன் இருளப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கமுதியில் வாழும் பொதுமக்களின் குலதெய்வம் ஆகும். இவர்கள் நேற்று 60 மாட்டுவண்டிகளில் தங்களது குலதெய்வத்தை வழிபாடு செய்வதற்காக கீழராஜகுலராமன் கிராமத்திற்கு வந்தனர். . 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம். ஆதலால் இந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து உள்ளனர். இவர்கள் 4 நாட்கள் தங்கி குலதெய்வ வழிபாடு செய்து விட்டு 24-ந் தேதி இரவில் தங்களது சொந்த ஊரான கமுதிக்கு செல்வார்கள்.
Related Tags :
Next Story