பக்தரிடம் செல்போன்- பணம் திருட்டு


பக்தரிடம் செல்போன்- பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 Jun 2023 12:22 AM IST (Updated: 21 Jun 2023 5:50 PM IST)
t-max-icont-min-icon

பக்தரிடம் செல்போன்- பணம் திருட்டு போனது.

திருச்சி

ஈரோட்டைச் சேர்ந்தவர் மதனகோபால் (வயது 50). இவர், நேற்று ஈரோட்டில் இருந்து பஸ்சில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து இருந்தார். சமயபுரம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய மதனகோபால் தனது மணிபர்சை பார்த்தபோது, திருட்டு போய் இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தும் மணிபர்ஸ் கிடைக்கவில்லை. மணிபர்சில் ஏ.டி.எம்., ஆதார், பான்கார்டு, செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரம் வைத்து இருந்தார். இது குறித்து மதனகோபால் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவிலுக்கு வந்த வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த 4 பக்தர்களிடம் பணம், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story