ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட பக்தர்கள் கோரிக்கை


ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட பக்தர்கள் கோரிக்கை
x

ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் காட்சி.

தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி கோவில் கொடை விழாவை முன்னிட்டு, ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் ஆனி கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆனி கொடை விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருவார்கள். கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் பக்தர்கள் 3 நாட்கள் தங்கியிருந்து வழிபடுவார்கள்.

தற்போது தாமிரபரணி ஆற்றிலும், குரங்கணி கோவில் அருகில் உள்ள ஆத்தூரான் கால்வாயிலும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே விழாக்காலங்களில் பக்தர்களுக்கு பயன்படும் வகையில், ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் ஆத்தூரான் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story