மருங்காபுரி கோவில் விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
மருங்காபுரி கோவில் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருச்சி
மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பால்குட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தின் முன்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பூக்குழி இறங்கினர். இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story