சோளிங்கர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.14 லட்சம் காணிக்கை
சோளிங்கர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.14 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
சோளிங்கர்
சோளிங்கர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.14 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலையில் யோக லட்சுமி நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவிலும் நகருக்குள் பக்தோசிப்பெருமாள் கோவிலும் உள்ளது. இந்த கோவில்களுக்கு தினமும் தமிழகம் மட்டுல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் பக்தர்கள் கோவில்களில் வைக்கப்பட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி பக்தோசித பெருமாள் கோவில் வளாகத்தில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்றது.
இதில் ரொக்கமாக ரூ.14லட்சத்து 20 ஆயிரம், தங்கம் 59 கிராம், வெள்ளி 93 கிராம் இருந்தது. இவை திருக்கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் உதவி ஆணையர் நித்யா, திருக்கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், ஆய்வர்கள் திலகர், பிரியா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் நரசிங்க ராஜா, பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.