ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.46 லட்சம் காணிக்கை
ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.46 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.46 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் 11காணிக்கை உண்டியல்கள் திறக்கும் பணி உதவி ஆணையர் ஜோதிலட்சுமி மேற்பார்வையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன், கணக்காளர் சீனிவாசன் மேற்பார்வையில் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ 46 லட்சத்து 31 ஆயிரத்து 674 ரொக்கமாகவும் தங்கம் 537 கிராமும், வெள்ளி 687 கிராமும் செலுத்தியிருந்தனர்.
Related Tags :
Next Story