அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் கோவிலில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. மேலும் பவுர்ணமி கடந்த 11-ந் தேதி காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 12-ந் தேதி காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வர முடியாத பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று திருவண்ணாமலைக்கு வருகை தந்து அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி தனித்தனியாக கிரிவலம் சென்றனர். இதனாலும் கோவிலில் பக்தர்களின் வருகை நேற்று அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவாறு சென்றனர்.

இன்று சுதந்திர தின விடுமுைற என்பதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக காணப்படும் என்பதால் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.


Next Story