11½ லட்சம் உண்டியல் காணிக்கை
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் ரூ.11½ லட்சம் மற்றும் 60 கிராம் தங்கத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்
திருச்சிற்றம்பலம்,
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் ரூ.11½ லட்சம் மற்றும் 60 கிராம் தங்கத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
நாடியம்மன் கோவில்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுவினர், மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.11½ லட்சம்
உண்டியல்களில் பக்தா்கள் ரூ.11 லட்சத்து 54 ஆயிரத்து 259 பணம், 60 கிராம் தங்கம், 124 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் பணத்தை எண்ணிய போதுபட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் இருந்தனர்.