ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பாதயாத்திரை ெசல்லும் பக்தர்கள்


ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பாதயாத்திரை ெசல்லும் பக்தர்கள்
x

ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

திருச்சி

திருச்சி:

உலக நன்மைக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் நேற்று திருச்சிக்கு வந்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 பக்தர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு தொடர்ந்து 101 நாட்கள் பாதயாத்திரையாக சென்று வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி காசியில் நிறைவு செய்கின்றனர். 7 மாநிலங்கள், 40 ஆறுகள், விந்திய சாத்புரா மலை ஆகியவைகளை கடந்து சுமார் 2,500 கி.மீ. தூரம் அவர்கள் செல்கின்றனர். இடையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். அதன்படி இந்த பாதயாத்திரை குழுவினர் நேற்று திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். நேற்று இரவு திருச்சியில் தங்கிய அவர்கள் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.


Next Story