பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்


பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்
x

மேலூரில் நாகம்மாள் கோவில் விழாவையொட்டி பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.

மதுரை

மேலூர், -

மேலூரில் நகராட்சி அலுவலகம் அருகே பிரசித்திபெற்ற நாகம்மாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பால்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொேரானா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் முதல் நாளான நேற்று மேலூர் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வெகு நீளமான அலகுகள் குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். ஏராளமான பெண்கள் அலகுகள் குத்தி பக்தி பரவசத்துடன் வந்தனர். நகரின் மைய பகுதியான மண்கட்டி தெப்பகுளம் என்னுமிடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகைக்கடை பஜார், பெரியகடைவீதி, செக்கடிபஜார் வழியாக கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்கள் கோவில் முன்பாக வைக்கப்பட்டு இருந்த பெரிய அண்டாக்களில் நிரப்பப்பட்டு மின்சார மோட்டார் மூலம் பால் உறிஞ்சப்பட்டு நாகம்மாளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது,


Next Story