ரெட்டணையில்வெண்ணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
ரெட்டணையில் வெண்ணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனா்.
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று அதிகாலை வெண்ணியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனை வேண்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், பால் குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, புஷ்ப அலங்காரத்தில் வெண்ணி அம்மன் அருள்பாலிக்க, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ரெட்டணை மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story