தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல்
சாணார்பட்டி அருகே மருநூத்து ஊராட்சி சாமிநாதபுரத்தில் காளியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த 3 நாட்களாக நடந்தது. கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சியுடன் கடந்த 29-ந்தேதி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து கரகம் ஜோடித்து சுவாமிகள் வாண வேடிக்கையுடன் கோவில் வந்தடைதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று அம்மனை தரிசித்தனர். நாளை (வியாழக்கிழமை) அம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலை சென்றடைவதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவில் சாமிநாதபுரம், மருநூத்து, ஆவிளிபட்டி, மணியகாரன்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story