சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்கள் எடுத்துச்சென்ற பக்தர்கள்


சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்கள் எடுத்துச்சென்ற பக்தர்கள்
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பூக்களை எடுத்துச்சென்றனர்.

திருச்சி

பூக்களை கொண்டு சென்றனர்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த பூச்சொரிதல் விழா பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் பூக்களை எடுத்துக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

அதன்படி திருச்சி குதுப்பா பள்ளம் பொதுமக்கள் சார்பில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்கள் எடுத்து செல்லப்பட்டது. இதில் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதயாத்திரை

இதேபோல் திருச்சி மாநகர் பகுதிகளில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் எடுத்து செல்லப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை பூக்களை கொண்டு செல்வார்கள். நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர். பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.


Next Story