புதிய தங்கத்தேரை பார்த்து செல்லும் பக்தர்கள்
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் புதிய தங்கத்தேரை பக்தர்கள் பார்த்து செல்கின்றனர்.
வேலூர்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 25-ந் தேதி நடந்தது. அன்று காலை புதிதாக ரூ.5 கோடியில் வடிவமைக்கப்பட்ட தங்கத்தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த தேர் கோவிலின் வெளிபிரகாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேரை நிறுத்தி வைக்க 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தொல்லியல்துறை அனுமதிக்காக காத்திருக்கிறது. அதுவரை கோவில் வெளிபிரகாரத்தில் தங்கத்தேர் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் புதிய தங்கத்தேரை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். பலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story